நாடு முழுவதும் வெடித்துள்ள மக்கள் போராட்டம்! வீதிக்கு இறங்கிய மஹிந்த தேசப்பிரிய!

0
23

றம்புக்கண பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளைஞருக்கு நீதி கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

அரச தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலை நாளுக்கு நாள் விண்ணை தொடும் அளவிற்கு உயர்கின்றன.