இலங்கையில் மேலும் அதிகரித்த சீமெந்து விலை!

0
26

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அந்நியச் செலாவணி பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் காரணமாக நாட்டில் அத்தியவாசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்து வருகின்றன. 

இந்த நிலையில் இலங்கையில் சீமெந்து பொதியொன்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, 50 கிலோகிராம் சீமெந்து பொதியொன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 2 ஆயிரத்து 350 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.