இலங்கையின் வறிய பிள்ளைகளின் கல்விக்காக பணம் அனுப்பிய சீன முன்பள்ளி மாணவர்கள்!

0
211

சீனாவின் ஹெங்ஷூ பிரதேசத்தை சேர்ந்த முன்பள்ளி மாணவர்கள் சிலர் தமது அன்றாட செலவுக்கு பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் பணத்தை, இலங்கையில் உள்ள வறிய பிள்ளைகளின் கல்விக்காக அன்பளிப்பு செய்துள்ளனர்.

இலங்கை ரூபாய் பெறுமதியில் 50 லட்சம் ரூபாயை இந்த முன்பள்ளி மாணவர்கள் சேகரித்தள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி இலங்கையில் குறைந்த வருமானத்தை பெற்றும் பெற்றோரின் பிள்ளைகளின் நலன்களுக்கு பயன்படுத்தப்படும் எனவும் தூதரகம் கூறியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தை சேர்ந்த யாசகர் ஒருவர் அண்மையில் 80 ஆயிரம் ரூபாய் (இலங்கை பெறுமதி) பணத்தை அன்பளிப்பு செய்திருந்தார்.

இந்த நிலையில், சீனாவின் முன்பள்ளி மாணவர்கள் இலங்கையின் வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்காக நிதியை வழங்கியுள்ளனர்.