அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒருவர் சுட்டுக் கொலை!

0
27

அம்பாந்தோட்டை மாவட்டம் – பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (23-04-2022) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவரே உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டில் வைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.