அமெரிக்காவின் உயரதிகாரிகள் இன்று உக்ரைனுக்கு முதல் பயணம்!

0
21

அமெரிக்காவின் உயரதிகாரிகள் இன்று உக்ரைன் தலைநகருக்கு செல்வார்கள் என்ற தகவலை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஏற்கனவே உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது செய்தியாளர் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் எண்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை கியேவுக்குப் பயணம் செய்வார் என்று கூறியிருந்தார்

இந்த பயணத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டினும் உள்ளடங்குவார் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்

இந்த பணயம் இடம்பெற்றால், மோதல் ஆரம்பித்ததில் இருந்து உக்ரைனுக்கு பயணம்; செய்யும் மூத்த அமெரிக்க அதிகாரிகளாக அவர்கள் இருப்பார்கள்.

எனினும்; இதுவரை உக்ரைன் தலைநகர் பயணம்; குறித்து வெள்ளை மாளிகை அல்லது வெளியுறவுத் துறையிடம் இருந்து உடனடி உறுதிப்படுத்தல் எவையும் வெளியாகவில்லை

இந்தநிலையில் பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின் உக்ரைனின் பாதுகாப்புத் தேவைகள் குறித்து விவாதிக்க, எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று ஜெர்மனிக்குச் செல்வார் என்று பென்டகன் முன்னர் கூறியிருந்தது.