மிக குறுகிய காலத்தில் உக்ரைன் வெற்றி காணும்!உக்ரைன் பிரதமர் அறிவிப்பு!

0
36

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் விரைவில் வெற்றி பெறும் என்று உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.

டெனிஸ் ஷ்மிஹால் இந்த கருத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்தப் போரில் உக்ரைன் வெற்றி பெறும். அத்துடன் இந்த வெற்றி மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கும் என்பதில் தாம் உறுதியுடன் இருப்பதாக டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் குண்டுவீச்சு அடுத்த ஆண்டு இறுதி வரை தொடரும். இதற்கான யதார்த்தமான சாத்தியம் இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியிருக்கும் நிலையிலேயே அடுத்தே உக்ரைன் பிரதமர் கருத்து வெளியாகியுள்ளது.