உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த களமிறங்கும் முக்கிய நபர்!

0
498
United Nations Secretary-General Antonio Guterres welcomes Russian President Vladimir Putin at the Libya summit in Berlin, Germany, January 19, 2020. REUTERS/Axel Schmidt

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக ஐ நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் (António Guterres) ரஷ்யாவுக்கு வரும் 26 ஆம் திகதி செல்வுள்ளார்.

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு அவர் உக்ரைன் அதிபரை 28 ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது.

இதன் விளைவாக உக்ரைனில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் தற்போது ரஷ்யா முற்றுகையிட்டிருக்கும் மரியுபோல் நகரில் ஒரு லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.

போரை நிறுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் முயற்சி மேற்கொண்டபோதும் அந்த முயற்சியில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் ரஷ்யாவுக்கு சென்று சமாதான முயற்சியை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.