றம்புக்கனை துப்பாக்கி சூடு பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு புறம்பாகவே நிகழ்ந்தது!

0
49

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு புறம்பாகவே றம்புக்கனையில் துப்பாக்கி சூட்டை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் கருணாசிறி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா சி.டி. விக்கிரமரத்ன மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நேற்று முற்பகல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி றம்புக்கன படுகொலை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு அழைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் பல மாதங்களாக எந்தவொரு போராட்டத்திலும் துப்பாக்கிகளை பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் மா அதிபர், அறிவுறுத்தி வந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் கேகாலை சம்பவத்தில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பொலிஸ்துறை முடிவு செய்துள்ளதாகவும்,

இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திற்கும் அறிவிக்கப்பட்டதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார்

இதேவேளை எதிர்காலத்தில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் பாதுகாப்புப் படையினர் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்ததாக ஆணையாளர் கருணாசிறி தெரிவித்தார்.