அமெரிக்காவில் பொலிஸ் நாயை கடித்துக் குதறிய நபர்!

0
54

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா பகுதியில் பொலிஸ் நாயை நபர் ஒருவர் கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாயை தாக்கிய நபர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான கார்ட் என அழைக்கப்படும் போலிஸ் நாய் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சம்பவம் அரங்கேறிய வீட்டில் இருந்து பொலிஸாருக்கு திருடன் புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. , வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். எனினும் திருடன் வீட்டினுள் சுற்றி திரிந்து நிலையில் சந்தேகநபரை வீட்டை விட்டு வெளியே வர வைக்க முடியாமல் போலிஸார் திணறி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் அழைத்து வந்திருந்த K9 நாயை வீட்டினுள் அனுப்பியபோது விரைந்து சென்ற நாய் திருடனை தாக்க முற்பட்டது. அப்போது நாயை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்த திருடன், நாயின் முகத்தில் கொடூரமாக கடித்ததோடு, கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. அங்கு இடம்பெற்ற பல களேபரங்களை தொடர்ந்து திருடனை பொலிஸார் பிடித்துள்ளனர்.

திருட்டு முயற்சி, கொலை மிரட்டல், போலிஸ் நாயை கொல்ல முயற்சி என பல குற்றங்களின் பேரில் திருடன் மீது சம்பந்தப்பட்ட பரிவுகளின் கீழ் வழக்கப் பதிவு செய்யப்பட்டு சோலானோ கவுண்டி ஜெயிலில் அடைக்கப்பட்டான். அத்துடன் திருடனுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதோடு, பரோலில் வெளியில் வர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.