வெள்ளைக் கொடிகளுடன் வீதிக்கிறங்கிய இலங்கையர்கள் – அலரி மாளிகை முற்றுகை

0
44

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அலரி மாளிகையினை போராட்டக் காரர்கள் வெள்ளைக் கொடிகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

அரச தலைவர், பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கோரி நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, கொழும்பு – காலிமுகத்திடல் அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery