உக்ரைனின் கோரிக்கையை நிராகரித்த ரஷ்யா!

0
662

உக்ரைன் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது என அந்நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ( Volodymyr Zelenskyy ) தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா 58 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையே நீடித்து வரும் போரால் இருதரப்பிலும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. 

உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்களின் முக்கிய தினமாக கருதப்படும் ஈஸ்டர் நாளுக்காக ரஷ்யாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதை ரஷ்யா நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்த அவர், இருப்பினும் அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.