பரபரப்பை ஏற்படுத்திய புடினின் காதலி; எங்கிருக்கின்றார் தெரியுமா?

0
34

ரஷ்ய அதிபர் புடினின் காதலி, சுவிட்சர்லாந்து அல்லது சைபீரிய மறைவு குழியில் பதுங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என்று கூறப்படும், Alina Kabaeva நான்கு குழந்தைகளுக்கு தாய் என கூறப்டுகின்றது. இந்நிலையில் Alina Kabaeva உக்ரைன் மீது ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கிய பின் தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருக்கும் ஜிம்னாஸ்டிக் பயிற்சித் திடலில் அவர் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

உக்ரன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பின்னர் Alina Kabaeva வை சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரிகள் அந்நாட்டிலிருந்து அவரை வெளியேற்ற வேண்டும் எனவும் அவர் ரஷ்ய நாட்டிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது.

இந்நிலையில், தற்போது அவர் ரஷ்யாவில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.