உக்ரைன் போர் செய்தியால் நேரலையில் அழுத செய்தி வாசிப்பாளர்

0
33

உக்ரைன் போர் குறித்த செய்தியை படிக்கும் போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி கதறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

உக்ரைனில் ரஷ்யப் படைகளால் பிப்ரவரி 24 அன்று தொடங்கிய போர் இன்று வரை தொடர்கிறது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள புச்சா பகுதியில் படையெடுத்த ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி ஜப்பானிய செய்தி நிறுவனம் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இந்த செய்தியை படித்த செய்தி வாசிப்பாளர் யுமிகோ மாட்சுவோ நேரலையில் தடுமாறி கதறி அழுதார். மௌனமாகி சிறிது நேரம் கழித்து செய்தியை தொடர்ந்து வாசித்தார்.

இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. செய்தி வாசிப்பவரைப் போலவே தாங்களும் மன உளைச்சலில் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்தனர். மக்கள் மனதில் இந்த யுத்தம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு இது சிறந்த உதாரணம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.