திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 டயலாக்… ஒரே நாளில் பிரபலமான மாப்பிள்ளை!

0
28

திருமண அழைப்பிதழில் கேஜிஎஃப் 2 படத்தின் பிரபலமான மாஸ் டயலாக்கை அச்சடித்து கர்நாடகாவை சேர்ந்த மணமக்கள் ஒரே நாளில் வைரலாகி விட்டனர்.

படத்தில் யாஷ் பேசும் பிரபல டயலாக்குகளில் ஒன்று, Violence, violence, violence…I don’t like violence. But violence liked me. So i can’t avoid it.

படத்தின் டிரைலரிலேயே இடம் பெற்ற இந்த டயலாக் பலருக்கும் பிடித்த டயலாக் ஆனது.

கர்நாடகாவை சேர்ந்த ரசிகர் ஒருவருக்கு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

இவர் தனது திருமண பத்திரிக்கையில் கேஜிஎஃப் 2 வில் இந்த டயலாக்கை மாற்றி, Marriage, marrriage, marriage. I don’t like it. I avoid. But my relatives like marriage. So I can’t avoid என அச்சிட்டுள்ளார்.