எரிபொருள் பெற காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு டீ கொடுக்கும் எரிபொருள் நிலையம்

0
27

எரிபொருள் பெற காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குஎரிபொருள் நிலைய ஊழியர்கள் டீ கொடுக்கும் காட்சியை இன்று பன்னிபிட்டிய எரிபொருள் நிலையம் ஒன்றில் காணக்கூடியதாக இருந்தது.

அதேவேளை இன்றும் நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் பெற மக்கள் வரிசைகளில் இருந்தது கானக்கூடியாதாக இருந்தது.

ஆனமடுவ கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (22) காலை முதல் பெற்றோல் பெறுவதற்காக 2000இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் வரிசையில் காத்திருப்பதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.


கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக பெற்றோல் இல்லை எனவும், இன்று காலை பெற்றோல் பவுசர் வரும் தகவல் பரவியதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் அதிகளவானோர் நகருக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நகருக்குள் கட்டுப்படுத்த முடியாத வகையில் மோட்டார் சைக்கிள்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2000இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பெட்ரோல் எடுக்க வந்திருப்பதைக் காணலாம்.