யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

0
42

யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள மக்கள் வங்கிக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்ற மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் மேலதிக விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.