வெளிநாட்டில் நடிகை ராதிகா வாங்கிய விருது!

0
540

நடிகை ராதிகாவின் சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சின்னத்திரை, வெள்ளித்திரை என தனது நடிப்பினால் கட்டிப்போட்டிருக்கும் நடிகை ராதிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். இவர் ரடான் மீடியாவில் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றி வருகின்றார்.

தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா மில்லர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ராதிகாவும் ஒருவர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற கையோடு, ராதிகா அங்கு உரையாற்றியும் இருக்கிறார்.

நடிகை ராதிகா பேசுகையில், “இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம்.

இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி,” என்று கூறியுள்ளார்.   

குறித்த நிகழ்ச்சியில் நடிகை ராதிகா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.