ஸஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட இருவர் விடுதலை

0
244

ஸஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட இருவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. ஆனால் ஸஹ்ரானை வீதியில் கண்டவர்கள், தேநீர் அருந்தியவர்கள் இன்றும் சிறையிலுள்ளனர். சாரா உயிருடன் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் தெரிவித்தார்.

ஹிட்லர் ஆட்சியா இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படுகிறது - முஜிபுர் ரஹ்மான்  கேள்வி - Ceylon East | #1 News Website form Sri Lanka 24x7 updates Online  Breaking News | Tamil
முஜிபுர் ரஹ்மான்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் மூன்றாண்டு நிறைவு தொடர்பில் பாராளுன்றத்தில் (22) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் பின்னரான காலப்பகுதி சாதாரண மக்களின் வாழ்க்கைக்கும் தேசிய நல்லிணக்கத்துக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. தற்கொலை குண்டுதாரிகளின் குழுவில் பிரதான நபருடன் சாரா ஜெஸ்மின் என்பவர் இருந்துள்ளார். சாரா இந்தியாவுக்கு தப்பித்துச் சென்றுள்ளாரென களுவாஞ்சிக்குடி முன்னாள் ஓ.ஐ.சி. அபூபக்கர் என்பவர் குறிப்பிட்டுள்ளார், இவர் இன்றும் தடுப்புக் காவலிலுள்ளார். சாரா மரணிக்கவில்லை, இந்தியாவிலுள்ளாரென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலைதாரிகளின் உடற்கூறு பரிசோதனைகளில் சாராவினதும் சாராவின் தாயாரினதும் டிஎன்ஏ ஒத்துப் போகவில்லையென ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாராவை சர்வதேச பொலிஸ் ஊடாக கைது செய்ய அரசாங்கம் இதுவரை பிடியாணையை பெற்றுக் கொள்ளவில்லை. குண்டுத் தாக்குதல் சம்பவத்தை அரசாங்கம் அப்போது பிற தரப்பினர் மீது பொறுப்பாக்கி அதிகாரத்தை கைப்பற்றியது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்துள்ளது. அதேவேளை, ஸஹ்ரானுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட இருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் ஸஹ்ரானை வீதியில் கண்டவர்கள், மேசையில் அமர்ந்து தேநீர் அருந்தியவர்கள் வருடக் கணக்கில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை எந்தளவுக்கு நியாயமானது என்றார்.