விலையுயர்ந்த அப்பம்! நுகர்வோர் அதிர்ச்சியில்!

0
24

கண்டி நகரில் அப்பம் ஒன்று 75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் முன்னர் அப்பம் ஒன்று 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருகடியை அடுத்து அப்பமும் விலையுயர்ந்துள்ளது.

எரிபொருள் உயர்வு, எரிவாயு தட்டுப்பாடு, அரிசி விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக அப்பத்தின் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை கண்டியில் உள்ள ஹோட்டல்களில் பரோட்டா, முட்டை பரோட்டா, கொத்துரொட்டி, பெட்டிஸ், கட்லஸ் போன்ற உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.