புற்றுநோய் காரணமாக கனடாவில் உயிரிழந்த பிரபல கோடீஸ்வரர்!

0
30

கனடாவை சேர்ந்த ஹாக்கி விளையாட்டு ஜாம்பவானும், கோடீஸ்வரருமான Guy Lafleur உயிரிழந்துள்ளார்.

முன்னாள் ஹாக்கி வீரரான Guy Lafleur தனது துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். Lafleur இறக்கும் போது அவரின் நிகர சொத்து மதிப்பு $10 மில்லியனாக இருந்துந்துள்ளது.

அவரது மரணச் செய்தி பல ஹாக்கி அணிகளையும் சக வீரர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பலரும் Lafleur குடும்பத்தாருக்கு இரங்கலும் ஆறுதலும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ல் Lafleur-க்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பரில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு மருத்துவர்கள் அவரது புற்றுநோயை சரிசெய்ய நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றினர்.

இருந்த போதிலும் அடுத்த ஒரு வருடத்தில் மீண்டும் புற்றுநோயால் Lafleur பாதிக்கப்பட்டார். Lafleur உயிரிழந்ததற்கான சரியான காரணம் தெரியவில்லை. அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.