சீனாவுடன் பேச்சு நடத்திய சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

0
29

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸீ ஸெங்ஹொங், இலங்கையின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட 07 நாடாளுமன்ற உறுப்பினர்களையே அவர் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு நேற்று 22ஆம் திகதி இடம்பெற்றதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை, சீனா வழங்கும் உதவிகள் மற்றும் பரஸ்பர விடயங்கள் குறித்து இரண்டு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

இந்தநிலையில் இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.