இலங்கைக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது சாத்தியமா?

0
29

குறைந்த விலையில் கூடிய பயனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்சார மோட்டார் வாகனங்கள் பலரின் சிறந்த தேர்வாக இருந்தது. முறையான சார்ஜிங் வசதிகள் இல்லாததாலும், ஒப்பீட்டளவில் புதிய தொழில்நுட்பம் சிக்கல் நிலைகள் காரணமாக நாட்டில் மின்சார வாகனங்களைத் தெரிவு செய்வது இன்னமும் கடினமாகவே உள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைந்த நாடுகள் மின்சார வாகனங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இலங்கையின் அமைவிடம் காரணமாக சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவே சூரிய சக்தியை பயன்படுத்தி கார்களை சார்ஜ் செய்ய முடியும் என்பதனால் எரிபொருளின் விலையை குறைக்க கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மின்சார கார்களை ஊக்குவிக்குமாறு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இலங்கை போன்ற நாட்டிற்கு மின்சார மோட்டார் வாகனங்கள் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை முதலில் நாம் அறிந்திருக்க வேண்டும் நாட்டின் நிலைமைக்கு ஒத்துப்போகிறதா இல்லையா? என்ற கேள்வி எழுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிருக்ஷ குமார சுட்டிக்காட்டுகிறார்.

நாட்டில் மின்சார கார்களுக்கு போதுமான சார்ஜிங் நிலையங்கள் இல்லாதது மின்சார மோட்டார் வாகன பாவனையாளர்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினையாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.

மின்சார கார்களுக்கான வரி குறைக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதியளிக்கும் அரசாங்கம் இவை அனைத்திற்கும் முன் முக்கிய விநியோகப் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே – இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

“பொதுவாக சாதரண வாகனங்களை விடவும் மின்சார வாகனங்களுக்கான பராமரிப்பு செலவு சற்றுஅதிகம் காரணம் சராசரி வாகனத்தின் பேட்ரிகளை விட மின்சார வாகனங்களுக்கான பேட்ரி விலை அதிகம்.

இவ்வாறான சிக்கல் நிலைகள் உள்ளது. மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி அண்ணிய செலாவணி பற்றகுறைகளுக்கு மத்தியில் எவ்வாறு எதிர்கொள்ளபோகின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.

அரசாங்கம் நீண்ட கால திட்டம் இருக்குமாக இருந்தால் வாகனங்களுக்கான வரியை பற்றி சிந்திக்கமுடியாது. சூரிய சக்தியை பெற்றுக்கொள்ள கூடிய நிலையில் எமது நாட்டின் அமைவிடம் அமைந்துள்ளது.

இதனை கருத்திற்கொண்டு வீடுகளுக்கு சூரிய சக்தியில் மூலம் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளகூடிய (சோலார் பேனல்கள்) வசதிகளை அரசு வழங்குமாக இருந்தால் பாரிய அனுகூலங்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்ளகூடியதாக இருக்கும்.

நாங்கள் எரிபொருகளை வௌிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கின்றோம். ஆனால் சூரிய வெப்பம் என்பது இலகுவாகவும் இலவசமாகவும் பெற்றுக்கொள்ளகூடிய ஒன்றாகும்.”

“குறித்த திட்டம் எமது நாட்டிற்கு எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தொடர்பில் சிந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாக மின்சார வாகனம் மலிவானது ஆனால் அதை பயன்படுத்தும் போது மற்றும் பராமரிப்பது சற்று சிரமமாகும்.

ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திலும் அரசங்கமும் அரசியல் தரப்பினரும் மின்சார வாகனங்களுக்கான வரியை குறைப்பதாக தெரிவிகின்றனர் அது நல்ல விடயம் தான். இருப்பினும் இந்த விடயத்தை நான் இவ்வாறுதான் பார்கின்றேன். முக்கியமாக குறித்த வாகனங்களுக்கான சார்ஜ் செய்ய கூடிய இடங்கள் இல்லாமையாகும்.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன் எல்லா இடங்களிலும் சார்ஜிங் செய்ய கூடிய இடங்கள் இருக்க வேண்டும். சார்ஜ் நிலையங்கள் இல்லாமல் மின்சார வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால் பாரிய சிக்கல் ஏற்படும். அடுத்த கட்ட பிரச்சினைதான் தற்போது நாட்டில் மின்சார நெருக்கடி இது போன்ற பிரச்சிணைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தான் குறித்த வாகன இறக்குமதிக்கு செல்லவேண்டும்.

அரசியல் வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த சிக்கல் நிலையை முழுமையாக பார்க்காமல் ஒருபகுதியை மட்டுமே பார்க்கின்றனர்.”

இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே – இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

“நாட்டில் வருடத்திற்கு ஒரு தடவைதான் இந்த வாகனங்களுக்கான வரிகள் குறைக்கப்படுகினறன.

இதனை 3 வீதம் வரையில் குறைக்கவேண்டும். அண்மை காலமாக அபிவித்தியடைந்த நாடுகள் பெட்றோல் வாகனங்களுக்கு அதிக வரியை விதிக்கும் அதேவேளை குறித்த வகையான வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கிவருகின்றன.

அதேபோன்று இவ்வாறான வாகனங்களுக்கு தேவையான மின்சாரத்தை பெற்றுக்கொள்ள வீடுகளில் சோலார் யூனிட்களுக்கு வரிவிலக்கு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது சரியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.”