சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்திருந்த தெரிப்பேஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில்!

0
54

காலி முகத்திடலில் சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பை முன்னெடுத்திருந்த தெரிப்பேஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேரர் கடந்த 20ஆம் திகதி சாகும் வரையிலான உணவுத் தவிர்ப்பு  போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே அவர் இன்றைய தினம் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.