அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் களம் இறங்கிய அமெரிக்கா!

0
44

அமெரிக்காவில், அழிந்து வரும் பவளப்பாறைகளை மீட்டெடுக்கும் முயற்சியாக, கற்றாழை இன பவளப்பூச்சிகளை விஞ்ஞானிகள் இனப்பெருக்கம் செய்து வருகின்றனர்.

புளோரிடா மாநில கடல் பகுதியில் பவளப்பூச்சிகளை தாக்கிய புதியவகை நோயால் பவளப்பாறைகள் நிறமிழப்பதுடன், பவளப்பூச்சிகளின் ஆயுட்காலமும் குறைந்து வருகிறது.

மேலும், நோயுற்ற பவளப்பூச்சிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பதால், பவளப்பாறைகளின் பரப்பளவு சுருங்கி வருகின்றன.

அவற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் களமிறங்கிய விஞ்ஞானிகள், கற்றாழை இன பவளப்பூச்சிகளை செயற்கை முறையில் இனப்பெருக்கம் செய்யும் முயற்சியில் வெற்றி கண்டனர்.

அவற்றை பவளப்பாறைகள் மீது விட்டு, இனப்பெருக்கத்துக்கு வழி வகுப்பதன் மூலம் பவளப்பாறைகளின் பரப்பளவை பெருக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

Gallery