நாடாளுமன்ற அமர்வுகளை 10 நிமிடங்களுக்கு தள்ளி வைத்த சபாநாயகர்!

0
554

வாத விவாதங்கள் காரணமாக நாடாளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது..

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும்போது சபாநாயகர் அந்த உரையை நிறுத்துமாறு கோரினார்

எனினும் சஜித் பிரேமதாச, தமது உரையை தொடர்ந்தபோது ஆளும் கட்சியினர் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதனையடுத்தே சபாநாயகர் சபை அமர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதேவேளை பொதுஜன பெரமுன கட்சியினர் இன்று நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றில் தமது உரையில் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவினரில் ஒரு குழுவினர் ஜனாதிபதியிடம் சென்று பதவி விலகவேண்டாம் கோரியுள்ளனர்.

அதே குழு, பிரதமரிம் சென்று ஜனாதிபதியை பதவி விலக்குமாறு கோருகிறது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதனை விடுத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பு உரிய திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.  

இதேவேளை நேற்று பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் முன்னெடுப்புக்களை மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானித்தபோதும் அது தொடர்பான கூட்டத்தில் ஆளும் கட்சியின் 88 பேர் மாத்திரமே பங்கேற்றதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.