காதலியுடன் வெளிநாடு சென்ற ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி!

0
556

உக்ரைன் மீதான போரில் முக்கிய பங்கை ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) வகித்து வருகின்ற நிலையில் அவர் காதலியுடன் வெளிநாடு சென்ற புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது .

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு முக்கியமான நபராகக் கருதப்படும் லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) கடந்த 2018-ம் ஆண்டு ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படமே இவ்வாறு வைரலாகியுள்ளது.

இந்த பயணத்தின் போது செர்ஜி லாவ்ரோவ் (Sergeĭ Viktorovich Lavrov) உடன் அவரது நீண்ட நாள் காதலி என்று கூறப்படும் ஸ்வெட்லானா பாலியாகோவும் , அடல்ட் படங்களில் நடித்துள்ள எகடெரினா லோபனோவாவும் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

அதேவேளை இந்த புகைப்படத்தில் ரஷியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான ஒலெக் டெரிபாஸ்காவும் உள்ளார். இந்த புகைப்படம் உணவகம் ஒன்றிற்கு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.