விமானத்தில் சக பயணி செல்ஃபி கேட்டதால் முகத்தில் பஞ்ச் கொடுத்த மைக் டைசன்!

0
427

பிரபல முன்னாள் குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் (Mike Tyson) பயணியை அடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

முன்னாள் குத்துச் சண்டை ஜாம்பவானான மைக் டைசன் (Mike Tyson) அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம்.

அடிதடி, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள் விவகாரம் போன்ற வழக்குகளில் மாட்டிக் கொண்டவர்.

சில பொது நிகழ்ச்சியிலும் கூட கடுமையாக நடந்து கொள்ளும் மைக் டைசன் (Mike Tyson) மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இம்முறை, சான் பிரான்சிஸ்கோவிலிருந்து விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த மைக் டைசனைப்(Mike Tyson) பார்த்த அவர் ரசிகர் தொடர்ந்து அவரிடம் பேச முயற்சி செய்வதும் செல்ஃபி எடுக்க வேண்டுகோள் வைத்ததும் மைக் டைசனுக்கு (Mike Tyson) எரிச்சலூட்டியதால் பின்பக்கம் அமர்ந்திருந்த அப்பயணியின் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதனால், அந்தப் பயணியின் முகத்தில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் சகப்பயணிகள் அதிர்ச்சியுடன் அமர்ந்திருக்கும் விடியோ வைரலாகி வருகிறது.