கனடாவின் பல மாகாணங்களில் பரவும் பறவைக்காய்ச்சல்

0
742

கனடாவில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், பல்வேறு மாகாணங்களுக்கும் பறவைக்காய்ச்சல் பரவிவருகிறது.

சமீபத்தில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்கள், பிரிட்டிஷ் கொலம்பியா, Saskatchewan மற்றும் கியூபெக் ஆகியவையாகும்.

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி நிலவரப்படி, சுமார் அரை மில்லியன் பறவைகள் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய உணவு ஆய்வு ஏஜன்சி தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பருக்கும் மார்ச்சுக்கும் இடையில் முதலில் அட்லாண்டிக் கனடாவில் முதலில் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் தெற்கு ஒன்ராறியோவிலும் ஆல்பர்ட்டாவிலும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிக அளவில் பறவைக்காய்ச்சல் பரவத் தொடங்கியது.

ஏப்ரல் 14 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவிலும், Saskatchewan மாகாணத்திலும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது கியூபெக், ஆல்பர்ட்டா மற்றும் தெற்கு ஒன்ராறியோவிலும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுன் பறவைக்காய்ச்சல் பரவலுக்கு, வனப்பறவைகளின் புலம்பெயர்தல் காரணமாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.