ரஷ்ய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேருக்கு நேர்ந்த கதி!

0
47

ரஷ்ய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

டெவர் நகரில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம் தெரிய வராத நிலையில் 27 பேர் படுகாயங்களுடன் சம்பவ இடத்தில் இருந்து மீட்கபட்டனர்.

இந்நிலையில் மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்வதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

கட்டுக்கடங்காமல் வெளியேறிய கரும் புகைக்கு மத்தியில் ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.