19ஆம் சீர்திருத்தத்தின் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் இன்று நாடாளுமன்றில் கையளிப்பு

0
24

19ஆம் சீர்திருத்தத்தினை வலுப்படுத்தும் திருத்தங்கள் அடங்கிய சட்டமூலம் ஒன்றை சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளனர்.

இதேவேளை, நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகரிடம் இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த சட்டமூலம் அரச தலைவர் சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ச தலைமையில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.