வெளிநாட்டவர்களுக்காக கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்திய இலங்கை

0
26

தடுப்பூசி போடப்படாத மற்றும் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு வரும் போது PCR பரிசோதனையின் தேவையை நீக்கி, நாட்டிற்குள் நுழைவதற்கான தேவைகளை இலங்கை மேலும் தளர்த்தியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளது.

தடுப்பூசி போடப்படாத மற்றும் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் அனைவருக்கும் முதல் நாள் PCR சோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வருகையின் போது PCR சோதனையிலிருந்து விலக்கு பெற, பயணிகள் புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள் எதிர்மறையான PCR அறிக்கையுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rapid Antigen சோதனைகளைத் தேர்வுசெய்யும் பயணிகள் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு அதைச் செய்திருக்க வேண்டும் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதிலிருநது விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.