நாட்டின் பொருளாதார சீர்க்கேட்டை கட்டுப்படுத்த நாட்டு மக்களின் ஆதரவு கோரும் இராணுவத் தளபதி

0
27

நாட்டின் இராணுவத் தளபதி முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதன் காரணமாக அத்தியவசிய பொருட்களின் விலைகளும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. 

இந்த நிலையில் நாடு முழுவதும் எரிபொருள் உட்பட பெறுமதியான பொருட்களை விநியோகிக்க முப்படையினருக்கு தேவையான ஆதரவை வழங்குமாறு இராணுவத் தலைவர் சவேந்திர சில்வா மக்களை கேட்டுக் கொண்டார்.

அதற்கேற்ப எரிபொருள் உட்பட தீவு முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு ஆதரவளிக்குமாறு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவத் தளபதி கூறினார்.