துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் இறுதி கிரியை முப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் இடம்பெற்றது !

0
25

றம்புக்கணையில் காவல்துறையினர் நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஹிரிவடுன்ன, நாரன்பெத்த பகுதியைச் சேர்ந்த கே. பி. சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியை இன்று தேவாலேகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாரன்பெத்த, ஹிரிவடுன்னபகுதியில் இடம்பெறவுள்ளது.

இறுதிச் சடங்குகள் நிறைவடையும் வரை அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12 (1) வது பிரிவின் கீழ் அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, கேகாலை மாவட்டத்துக்கு உட்பட்ட தேவாலேகம, றம்புக்கண மற்றும் கேகாலை ஆகிய காவல்துறை பிரிவுகளில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நேற்று முதல் இன்றுவரை ஆயுதம் தாங்கிய முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.