கல்பிட்டி – மாம்புரி பிரதேசத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரி வாகன விபத்தில் பலி

0
30

வீதி விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் விசேட பணியகத்தின் புத்தளம் பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கல்பிட்டி – மாம்புரி பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 19ஆம் திகதி புத்தளம் – அனுராதபுரம் வீதியில் சிரம்பியடிய பிரதேசத்தில் பொலிஸ் பரிசோதகர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

காயமடைந்த பொலிஸ் பரிசோதகர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் பரிசோதகர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.