சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவரை சந்தித்த அமெரிக்க தூதுவர்!

0
387

சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை சந்தித்துள்ளார்.

அதன் போது, இலங்கையின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான அவரது நோக்கு தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதில் இலங்கை பெண் தலைவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பிற்கு அமெரிக்கா ஆதரவு வழங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள முன்னாள் அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.