இதுவே எமது வாழ்வின் இறுதியாக இருக்கக் கூடும்; உதவிகோரும் உக்ரைன் கடற்படை தளபதி

0
431

மிகவும் இக்கட்டான கடைசி மணி நேரங்களில் சிக்கித் தவிப்பதாகவும், போரில் காயமடைந்த வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை வெளியேற்ற உலக நாடுகள் உதவ வேண்டுமெனவும் உக்ரைன் கடற்படை தளபதி ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.

காணொளியில் உக்ரைன் கடற்படை 36-வது பிரிவின் தளபதி Serhiy Volyna, சில நாட்களோ அல்லது மணி நேரங்களோ உள்ளதாகவும், இதுவே தங்களது வாழ்வின் இறுதியாக இருக்கக் கூடும் என தெரிவித்துள்ளார்.

தங்களை விட எதிரிப் படைகளின் பலம் பல மடங்கு பெரியது என தெரிவித்துள்ள அவர், வான், தரை என அனைத்து வகைகளிலும் ரஷ்யப் படைகள் ஆதிக்கம் செலுத்துவதாகவும் கூறினார்.