ராஜபக்சர்களிடம் உள்ள 18 பில்லியன் டொலர்கள் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை – நாமல் அறிவிப்பு

0
441

2015 இல் நாங்கள் ஆடம்பர கார்கள் குதிரைகள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 18 பில்லியன் டொலர்கள் போன்றவற்றை வைத்திருக்கின்றோம் என குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்,  எனினும் யாராலும் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணையையும் எதிர்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ராஜபக்சர்கள்  ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என எதிர்கட்சியினர் மீண்டும் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்துள்ளனர். நாங்கள் எந்த விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார். எதிர்கட்சிகள் வெளிநாடுகளில் வழக்கு தாக்கல் செய்து பார்க்கட்டும்.

 எதிர்கட்சிகள்,  ராஜபக்சர்கள் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்துள்ளனர். சட்டவிரோதமாக சேமித்த பணத்தை வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளனர். ஆட்சியில் இருந்தவேளை இதனை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை.

 2015 இல் நாங்கள் ஆடம்பர கார்கள் குதிரைகள் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட 18 பில்லியன் டொலர்கள் போன்றவற்றை வைத்திருக்கின்றோம் என தெரிவித்தனர். அவர்கள் அது குறித்துவிசாரணை செய்தனர் ஆனால் அவர்களால் எதனையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

மீண்டும் அந்த பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.