சீனாவின் ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு நீட்டிப்பு

0
643

சீனாவின் ஷாங்காய் நகரில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், சில பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது.

2 கோடியே 85 லட்சம் மக்கள் வசிக்கும் ஷாங்காய் நகரில், கடந்த மாதம் கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வருவாய் இழப்பு மற்றும் உணவுப் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டாலும், நகரின் பல்வேறு பகுதிகளில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூடுதலாக, டெஸ்லா உட்பட பல தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன. சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 3 வார ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் என நம்பிய மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.