சீனாவை தொடர்ந்து மற்றொரு நாட்டில் வேகமெடுக்கும் கொரோனா!

0
360

சீனாவை தொடர்ந்து நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு சமீப காலமாக திடீரென அதிகரித்து வருகிறது. நியூசிலாந்தில் சமூக பரவலாக ஆங்காங்கே சில குறிப்பிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்த நிலையில், வியாழன் அன்று புதிதாக 10,294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, நியூசிலாந்தின் பெரிய நகரமான ஆக்லாந்தில் 2,274 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தற்போது 524 நோயாளிகள் நியூசிலாந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் 4 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மேலும் கொரோனாவால் மேலும் 18 இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நியூசிலாந்தில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 8,58,576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.