பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அரச தலைவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு

0
30

கடந்த அரச தலைவர் தேர்தல் மேடையில் நேர்மையாக உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலை நாட்டுவதாக முழக்கமிட்டு, ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர் பின்னர் அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு செயற்பட்டு வருகிறார் என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Cardinal Malcolm Ranjith) குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று(21) நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

“ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளியிடப்படாமல் இருக்கும் செயற்பாடுகளின் பின்னணியில் இருப்பவர், நாட்டின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்திக்கொண்ட சிறப்பு அதிகாரம் படைத்தவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் கூக்குரல்கள் வாகனத்தை நோக்கி முழக்கமிடுகின்றன. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும் என முழுமையான நம்புகிறேன்” என்றார்.