அனுமதி இல்லாமல் பிறந்தநாள் கொண்டாட்டம் இழப்பீடாக 4 1/2 இலட்சம் டொலரை பெற்ற நபர்!

0
311

அமெரிக்காவில் கென்டக்கியைச் சேர்ந்த ஒருவர், அவருக்கு சர்ப்ரைஸாக பிறந்தநாள் விழாவை கொண்டாடியதற்காக, தனது முன்னாள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடாக 450,000 அமெரிக்க டொலரை பெற்றுள்ளார்.

கோவிங்டனில் உள்ள கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்த கெவின் பெர்லிங் (Kevin Berling), 2019-ல் நடந்த தேவையற்ற பிறந்தநாள் விழா தனக்கு கவலையையும் பீதியையும் கொடுத்ததாக தனது மனுவில் கூறியுள்ளார்.

29 வயதான அவர், 2018-ல் முதன்முதலில் அந்நிறுவனத்தில் சேர்ந்தபோது, ​​​​தனக்காக பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று அலுவலக மேலாளரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதாக அவர் பைஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டினார்.

பெர்லிங் கோரிக்கை விடுத்து இருந்தபோதிலும், 2019 ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஒரு ஆச்சரியமான முறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்தியது. ஆனால், இதனால் அந்நேரத்தில் அவர் பீதியடைந்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக அந்த கொண்டாட்டத்திலிருந்து வெளியேறி, சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டார் மற்றும் அவரது காரில் மதிய உணவையும் முடித்துள்ளார்.

கெவின் பெர்லிங் பணிநீக்கம்
அடுத்த நாள், நிறுவனத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், பெர்லிங் மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டார். அவர், சக ஊழியர்களின் மகிழ்ச்சியை சிதைத்தாகவும் மற்றும் ஒரு சிறுமி போல் நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.

அந்த கூட்டத்திலும் இரண்டாவது முறையாக அவர் பீதியடைந்தார். பின்னர், பீதி அடைந்ததற்காக பெர்லிங் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு நிறுவனத்திடமிருந்து , முந்தைய வார நிகழ்வுகள் காரணமாக அவர் பணிநீக்கம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கும்” ஒரு மின்னஞ்சல் வந்ததாக அவர் கூறினார்.

கெவின் பெர்லிங் வழக்கு தாக்கல்
பணிநீக்கம் செய்யப்பட்ட அவர் பின்னர் கென்டன் கவுண்டியில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார், இழப்பீடு மற்றும் இழந்த வருமானத்திற்கு இழப்பீடு கோரினார்.
அதனைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் விசாரணைக்குப் பிறகு, நடுவர் மன்றம் பெர்லிங்கிற்கு 450,000 வழங்கியது. இதில் உணர்ச்சிபூர்வமாக பாதிக்கப்பட்டதற்கு 300,000 டொலரும், இழந்த ஊதியத்திற்கு ஈடாக 150,000 டொலரும் அடங்கும்.

தீர்ப்பை எதிர்த்து நிறுவனம் மேல்முறையீடு
ஆனால், நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளது. Gravity Diagnostics இன் தலைமை இயக்க அதிகாரி ஜூலி பிரேசில் உள்ளூர் செய்தி நிறுவனமான Link NKY இடம், “பணியிட வன்முறைக் கொள்கையை” மீறியதாகக் கூறிய பெர்லிங்கை நிறுத்துவதற்கான அதன் முடிவில் நிறுவனம் நிற்கிறது என்று கூறினார்.

உண்மையில், இந்த வழக்கில் தனது ஊழியர்களே உண்மையான பாதிக்கப்பட்டவர்கள் என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்றும் ஜூலி பிரேசில் கூறினார்