35வது ராணுவ தளபதியையும் இழந்த ரஷ்யா! 56வது நாளாக தொடரும் உக்ரைன் ரஷ்ய போர்!

0
38


உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ரஷ்யா தனது 35வது ராணுவ கர்னலையும் தற்போது இழந்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கையை 56வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா தனது 35வது ராணுவ கர்னல் மிகைல் நாகமோவ்வையும்(41)இழந்துள்ளது.

இவர் ரஷ்யாவின் மேற்கு எல்லை ராணுவ பகுதியின் சப்பர் படைப்பிரிவு ராணுவ கர்னலாக தலைமை தாங்கி செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நாகமோவ் இறந்துவிட்டதை அவரது சொந்த பகுதியான ரஷ்யாவின் சஸ்லோங்கர் அரசு அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது.

மேலும் அவரது இறுதிசடங்கள் மைதிச்சி பகுதியில் உள்ள கூட்டாட்சி இராணுவ நினைவு கல்லறை வைத்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையில் இதுவரை ரஷ்யா 20,000 ராணுவ வீரர்கள் வரை இழந்து இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து ரஷ்யா எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.