உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பவுள்ள நோர்வே

0
36

உக்ரைனுக்கு 100 வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புவதாக நோர்வே அறிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 2 மாதமாக நீடித்து வரும் நிலையில் நோர்வே அரசு உக்ரைனுக்கு ஏற்கனவே பல்வேறு உதவிகளை செய்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு பெரும் பயனளிக்கும் ஏவுகணை வகையிலான குறுகிய தூர ஏவுகணை அமைப்புகளை பிரான்ஸ் வழங்கியுள்ளதாக நோர்வே பாதுகாப்பு அமைச்சர் போஜோன் அர்லிட் தெரிவித்தார்.

உக்ரைனுக்கு ஏற்கனவே 4,000 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.