மட்டக்களப்பைச் சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்!

0
271

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பைச் சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்தனர்.

ஒரு பெண், சிறுமி, நான்கு வயது சிறுவன் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்று புதன்கிழமை (20) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.

தனுஷ்கோடியை சென்றடைந்த குறித்த இலங்கை தமிழர்களை மீட்ட மெரைன் காவல்துறையினர் தனுஷ்கோடி மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த நபர்கள் மட்டக்களப்பில் இருந்து எவ்வாறு தனுஷ்கோடிக்கு சென்றார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.