எரிபொருளின் விலை அதிகரிப்பிற்கு இதுவே காரணம்: வலுசக்திதுறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர

0
47

எரிபொருள் விநியோக கட்டமைப்பினையும், மின்விநியோக கட்டமைப்பையும் சீராக முன்னெடுப்பதற்காகவே எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்திதுறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை பதவியேற்று 24 மணித்தியாலயத்திற்குள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதன் பின்னணி குறித்து எதிர்தரப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோலியக கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்காத காரணத்தினால் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 1.6 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொள்கிறது.

எரிபொருள் மற்றும் மின்சார சேவை கட்டமைப்பை சீரான முறையில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதற்காகவே இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிட்டது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதால் பொது மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம்.

எரிபொருள் விலை குறைப்பு,எரிபொருளை தடையின்றி விநியோகித்தல் குறித்து எதிர்தரப்பினர் வசம் சிறந்த யோசனை இருந்தால் அவர்கள் அதனை தாராளமாக முன்வைக்கலாம்.