உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா

0
42

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்ள அமெரிக்கா போர் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பும்.

இது விமானப்படையை வலுப்படுத்தவும் சீரமைக்கவும் தேவையான கூறுகளையும் அனுப்பும். கிழக்கு உக்ரைனின் Donbass பகுதியில் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி ஜெலன்ஸ்கி போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய ஜோ பைடன், உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்குவதாக அறிவித்தார். எவ்வாறாயினும், எந்த வகையான விமானத்தை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

சமீபத்தில் அமெரிக்கா 800 மில்லியன் டொலர் ராணுவ உதவியை உக்ரைனுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.