எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது: அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு

0
42

எதிர்வரும் சில நாட்களுக்கு தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு படிப்படியாக தவிர்க்கப்பட்டு வருகின்றபோதும் எரிபொருள் போக்குவரத்தில் இன்னும் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், அடுத்த 10 நாட்களுக்கு தேவையான பெட்ரோலும் எதிர்வரும் 14 நாட்களுக்கு தேவையான டீசலும் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.