முகமூடி அணிவதைத் தடை செய்யும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்: சிறப்பு மருத்துவர்கள் சங்கம்

0
347

பொது இடங்களில் முகமூடி அணிவதைத் தடை செய்யும் முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சிறப்பு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், உலகின் ஏனைய பகுதிகளில் புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் பதிவாகி வருவதாகவும், அந்த நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட வேண்டுமெனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் லக்குமார் பெர்னாண்டோ மற்றும் செயலாளர் கலாநிதி க.ஞானசேகரம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சராக பதவியேற்ற பேராசிரியர் சன்ன ஜெயசுமன, பொது இடங்களில் முககவசம் இனி அணியத்தேவையில்லை என அறிவிப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.