ரம்புக்கனை ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினரின் கடுமையான செயற்பாடுகள்

0
407

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும்  காவல்துறைக்கும் மோதல் ஏற்பட்டதை அடுத்து  காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கேகாலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் ஆபத்தாக உள்ள நிலையில், அவர்கள் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு பவுசர் மற்றும் முச்சக்கர வண்டிக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், பின்னர் கூட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியதாகவும் நிஹால் தல்துவ கூறினார்.

அதேவேளை, வீழ்ந்து கிடக்கும் போராட்டக்காரர்கள் அருகில் காவல்துறையினர் சென்ற போது, “எதுவும் செய்யவேண்டாம் சேர்” என்று காவல்துறையினரைப் பார்த்து ஆர்பாட்டக்காரர்கள் கதறும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.