வீதிகளின் குறுக்காக ரயர்களை எரித்து போராட்டம்! முடங்கியது திருகோணமலை

0
42

திருகோணமலையில் போராட்டக்காரர்களால் வீதித்தடை போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி, பொருளாதார தட்டுப்பாடு, தொடர்பான நெருக்கடிகளுக்கு தீர்வு பெற்றுத்தரக்கோரியும் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையிலேயே இன்றைய தினம் திருகோணமலையிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வீதிகளின் குறுக்காக ரயர்களை போட்டு எரித்தும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

திருகோணமலை – கண்டி பிரதான வீதி அபயபுர சுற்று வளைவு சந்தியில் மூன்று பக்கமாகவும் ஆர்ப்பாட்டகாரர்களால் வீதித் தடை போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் பேருந்து ஒன்று வீதிக்கு குறுக்கே நிறுத்தப்பட்டுள்ளதுடன் உப்புவெளி பகுதிக்குச் செல்லும் வீதியும் மறிக்கப்பட்டுள்ளது.

கடைகள் மற்றும் மத்திய மீன் சந்தை மூடப்பட்டுள்ள அதே வேளை பாடசாலைக்கும் மாணவர்கள் செல்லவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காலை தொழில் நிமித்தம் சென்ற பலரும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.